உண்மையில், சமூகம் கவலைப்பட வேண்டிய ஒரு அடிப்படைப் பிரச்சனையையே பாரதிபாலன் எடுத்துக் கையாண்டு இருக்கிறார். மூன்று முக்கிய பாத்திரங்கள் வழிக் கதையை நடத்துகிறார். வாசகர்களின் மனசாட்சியைத் தொட்டுச் சிந்திக்க வைக்கிறார். எத்தனைக் காலம் இந்த நிலை நீடிக்கப்போகிறது என்று கேள்வி கேட்கிறார். இந்த நிலை மாறாமல் நமக்குக் கடத்தேற்றம் இல்லை. என்கிறார். அதே சமயம் எந்தத் தீர்வும் அவர் சொல்லவில்லை. ஏனெனில், சகல் பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்வது எழுதுபவர் வேலையும் இல்லை. பிரச்சினைகளை அலசும்போதே தீர்வும் அலசப்படுகிறது என்பதே எழுத்தின் நியாயம். எழுத்தின் நடைமுறை. இந்த முக்கிய விஷயத்தைக் கையாளத் தேவையான மொழி, பாரதிபாலனிடம் நிரம்பி இருக்கிறது. எளிய, புரியும் படியான, அதே சமயம் இறுக்கம் கூடிய மொழியால், சுலபத் தன்மையோடு எழுதி இருப்பது, குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். வாசகர்க்கு மிகவும் திருப்தி தரும் நல்ல அம்சமாகும் இது.
- பிரபஞ்சன்
No product review yet. Be the first to review this product.